கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச தொடரின் 207ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (2021.02.26) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்திருந்த வடமேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய தும்புள்ளே ஸ்ரீ சீலக்கண்ட தேரருக்கு வெற்றிலை தட்டு வழங்கி வரவேற்றார்.

கௌரவ பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசலச' தர்ம உபதேச தொடரின் 207ஆவது தர்ம உபதேசமானது நவம்புர பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்றும் இன்றும் தனது நாட்டு மக்களை ஆளும் போது அவரவருக்கு உள்ள தகுதிகளை ஆராய்ந்து பொறுப்புவாய்ந்த பதவிகளை ஒப்படைத்துள்ளார்.

கௌரவ பிரதமர் இந்நாட்டு மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி சென்று வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். அதேபோன்று பிக்குமாரின் பெற்றோருக்காக கௌரவ பிரதமர் அவர்கள் ஆரம்பித்துள்ள வீடமைப்பு திட்டமானது மாபெரும் புண்ணிய நிகழ்வாகும் என்றும் தும்புள்ளே ஸ்ரீ சீலக்கண்ட தேரர் தெரிவித்தார்.

விவசாய தோட்டங்களை உருவாக்குதல், வனங்களை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு மட்டுமல்லாது சிறிய விலங்குகளுக்குமான குடிநீர் வசதிகளை வழங்குவதை எளிதாக்குதல், இவ்வாறு காடுகளின் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் இந்நாடே அபிவிருத்தி அடையும் என்றும் அவர் கூறினார்.

இந்நாட்டை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல கௌரவ பிரதமர் அதிமேதகு ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதற்கு தடைகள் ஏற்படக்கூடும். அந்த தடைகளை சமாளித்து முன்னேறி செல்வதற்கான வலிமையை பெறுவதற்கு புத்தப் பெருமானின் தர்ம மார்க்கம் உதவியாக அமையும் என்றும் தும்புள்ளே ஸ்ரீ சீலக்கண்ட தேரர் அனுசாசனம் நிகழ்த்தினார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி நடைபெற்ற தர்ம உபதேச நிகழ்வு பக்தர்களின் பங்கேற்பின்றி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது.

'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத்தை செவிமடுப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours