மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயேகங்களை அரச அதிகாரிகளால் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சட்டரீரியான சவால்கள் பற்றியும் ஆராயும் விசேட கலந்தரையடல் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் இன்று (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 



இதன்போது மாவட்டத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச உத்தியோகத்தர்கள்இ பொலிசார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளுக்கிடையில் சிறுவர் துஸ்பிரயோகத்தினை தடுப்பதில் அரச அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும்இ சட்டரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விரிவாக கலந்துரையடப்பட்டது.


அத்துடன் பாடசாலை மட்டங்களிலும்இ கிராமிய மட்டங்களிலும் ஏற்படுகின்ற துஸ்பிரயோகங்கள்இ தற்கொலைகள்இ தற்கொலை முயற்சிகள் போன்ற விடயங்களும் அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கவேண்டிய விடயங்கள் பற்றியும் ஆலேசிக்கப்பட்டன.


உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்ட வைத்திய நிபுணர்களான டாக்டர் இளங்கோவன்இ டாக்டர். சொனாலி உட்பட சிரேஸ்ட சிறுவன் நன்னடத்தை உத்தியோகத்தர்இ சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள்இ தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள்இ சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்இ பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.












 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours