மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் நாராஹேன்பிட அபயராமாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட இரு நூல்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று (2021.02.26) பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டது.

'ரன் ஹீய' மற்றும் 'ஹெல வெதகமே யடகியாவ' (சுதேச வைத்தியத்தின் வரலாறு) ஆகிய இரு நூல்கள் இவ்வாறு கலாநிதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் கௌரவ பிரதமரிடம் வழங்கிவைகப்பட்டது.

இந்நிகழ்வு நாராஹேன்பிட அபயராம விகாரையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஹீய எனும் பெயரில் கலாநிதி வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் சிலுமின பத்திரிகைக்கு எழுதிய பத்திகளின் தொகுப்பு 'ரன் ஹீய' நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் இந்துறுகாரே தம்மரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மேலும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால த சில்வா, காமினி லொகுகே, தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான பேராசிரியர் சன்ன ஜயசுமன, சீதா அரம்பேபொல, சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours