(வவுணதீவு நிருபர் )        சதீஸ்



கிழக்கு மாகாணத்தில் இம்முறை  கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள  கிடைக்கப் பெறாத மாணவர்கள் அத்துடன் அடையாள அட்டை கிடைக்கபெற்ற அடையாள அடடைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக  மாட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு  பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  ஜி. அருணன் தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை (26) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தில் 
வெள்ளிக்கிழமை, சனிக்கிழைமை (27ம் திகதி) ஆகிய தினங்களில் 4.00 மணிவரை இச் சேவை இடம் பெறும் எனவும்  இது தொடர்பில்  065-2229449 /  071-9592224 தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours