தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் உதைபந்தாட்டப் போட்டி.
வேலோடுமலை வேலவன் இசைப்பாடல் வெளியீட்டு விழா
மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் போஸ்ற்மாஸ்டர் வேலுப்பிள்ளைக்கு கௌரவம்
அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளருக்கு வழக்கு தாக்கல்
சம்மாந்துறையில் வாக்குகளைப் பேரம் பேசுகின்ற அரசியல் கலாசாரம் உள்நுழைந்திருப்பது சம்மாந்துறை அரசியலுக்குப் பாரிய இழுக்கு சம்மாந்துறையில் இரு கட்சி மோதல் குறித்து உதுமான் கண்டு நாபீர் கண்டனம்
(எம்.ஏ.றமீஸ்)
நாடளாவிய ரீதியில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைஞர் சுவதம் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கலைகஞர்களுக்கு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து கலைஞர்கள் இவ்வாறு கலைஞர் சுவதம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(25) பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.
இலக்கியம், பல்துறை, இசைத்துறை, சிறுகதை, பாடல் இயற்றல், ஓவியம் வரைதல், நாட்டார் இலக்கியம் போன்ற துறைகளில் மிளிர்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் இதன்போது நினைவுச் சின்னம் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இனங்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானம் ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள சுவரோவியம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற கலைஞர்களும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours