இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார் CLG ஏ.எல்.எம்.அஸ்மி .!
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்ளை கௌரவிக்கும் நிகழ்வு
திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
விபுலானந்தாவில் மூன்றுபேர் மருத்துவம் நான்குபேர் பொறியியல்
ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலய மாணவன் சராபத் இஸ்னி தேசிய மாணவச் சிப்பாயில் (Warrant officer -II) பதவி உயர்வு.
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து பிரஸ்தாபித்த உறுப்பினர் பி.எம்.ஷிபான், தனியாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மலசல கழிவகற்றலுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது குறித்து சில மாதங்களுக்கு முன் கவனம் செலுத்தப்பட்டு, சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேசித் தீர்வு காண்பதற்காக உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் பொறுப்பாக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவித்த முதல்வர், அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்.
தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உறுப்பினர் அமீர் சபைக்கு விபரித்ததையடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான நவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டதுடன் விரைவில் அதற்குரிய குழுக்கூட்டமொன்றை நடத்துமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours