(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
--------------------------------------------
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலகம் நடாத்திய "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு 
கலாசார உத்தியோகத்தர் திருமதி எம்.எச்.பெளசுல் ஹிபானாவின் 
நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரின் தலைமையில் (24) பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கலைஞர்கள் உள்ளடங்களாக ஆண்கள்-06, பெண்கள்-04 என 10 கலைஞர்களுக்கு "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் சுகாதார முறைப்படி சமூக இடைவெளி பேணி நடாத்தப்பட்டது.

மருதமுனை எம்.ரி.முகம்மது நெளபல், நற்பிட்டிமுனை ஏ.எம்.கஸ்பியா வீவீ, மருதமுனை எம்.ஜ.கைறுன்னிஸா ஆகியோர் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைக்காகவும் மருதமுனை எம்.எச்.ஏ.கரீம், கல்முனைக்குடி எம்.எஸ்.பிஸ்மின் கவிதை மற்றும் பாடலாக்கத்துக்கும் கல்முனைக்குடி எஸ்.தஸ்தகீர் கவிதை மற்றும் கட்டுரைக்காகவும் நற்பிட்டிமுனை எம்.கே.சம்சுன்னுசா கவி பாடுதலுக்கும் கல்முனை ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் ஆய்வுக் கட்டுரைக்காகவும் மருதமுனை ஏ.எச்.ஏ.ழாஹிர் கவிதைக்காகவும் கல்முனைக்குடி எம்.வை.எம்.றஜாகாதர் பொல்லடி அண்ணாவியார் ஆகிய துறைகளுக்கு
பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன பிரதம அதிதியாக கலந்து கொண்ட 
அம்பாறை மாவட்டச் செயலக மேலதிக
அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், கெளரவ அதிதியாக கலந்து கொண்ட அம்பாரை
மாவட்ட கலாசார உத்தியோகத்தர்
ரீ.எம்.றிம்ஸான் பிரதேச செயலாளர் மற்றும்
கலாசார தலைவர் எம்.எம்.நஸீர் ஆகியோர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன், பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், பொருளாளர் ஏ.ஆர்.எம்.சாலி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனாபா எஸ்.எல்.எம்.நெளபல்
 ஆகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours