க.விஜயரெத்தினம்,சா.நடனசபேசன்)

மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும்,பிரபல சமூக சேவையாளரும்,இலக்கியவாதியுமான தராக்கி என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(29)காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டு.ஊடக அமையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நினைவுதினத்தில் முதலில் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து,16ஈகைச்சுடரேற்றப்பட்டு,மலர்தூவி,இரண்டு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு,சிவராமிற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன்,மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன்,அ.கங்காதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராமிற்கு கொவிட் 19 சுகாதார நடமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தி நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours