காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
சித்ரா பௌர்ணமி வரலாறு
தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் கொடுக்காதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் எனப் பெயர் பெற்றார்.
சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாகப் பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.
தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது தங்களுக்கு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவபெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார்.
இந்திரனின் அரன்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்கு குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் எடுத்துரைக்கஇ,எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்கு குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். அவர் சிதிரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் சித்திரா குப்தன் என அழைக்கப்படுகின்றார்.
Post A Comment:
0 comments so far,add yours