கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் பினூப்  ( வயது 30) இவர் கோழிக்கோட்டில் வேலைபார்த்து வந்தார்.  ஊரடங்கு அறிவிக்கபட்டதால்  சொந்த ஊருக்கு சென்று மனைவி குழந்தைகளுடன் இருக்க விரும்பினார். ஆனால் அவர் சொந்த ஊர் செல்ல பஸ் கிடைக்கவில்லை.


கோழிக்கோட்டில் இருந்து அவரது சொந்த ஊர் திருவல்லாவுக்கு 270 கிலோமீட்டர் 4 மாவட்டஙக்ளை கடந்து செல்ல வேண்டும். கோழிக்கோடு அருகே ஒரு பஸ் நிறுத்ததில் தனியார் பஸ் ஒன்று நின்று கொண்டு இருந்தது. சுற்றிலும் யாரும் இல்லை.   அந்த பஸ்சில் டீசலும் நிரப்பப்பட்டு இருந்தது. அந்த பஸ்சை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்.

ஆனால் இரவில் இரண்டு இடங்களில் போலீசார் அவர் திருடி சென்ற பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.  பதானம்திட்டாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர்  கூறினார். இதனால் போலீசார் அவரை செல்லும் படி கூறி விட்டனர். 

கோழிக்கோட்டை விட்டு வெளியேறி, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் வழியாக சென்று கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் புகழ்பெற்ற குமரகம்  சுற்றுலா இடத்தை அடைந்தபோது, அவரை குமரகம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடமும் அவ்வாறே அவர் கூறி உள்ளார். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்து விசாரித்த போது உண்மயை ஒத்து கொண்டார். போலீசார் அவரை கைது செய்து  பஸ்சை பறிமுதல் செய்தனர்.  

இதற்குள்  பஸ்சை காணவில்லை என அதன் டிரைவர்  குட்டியாடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். குட்டியாடி போலீசார் டினூப்பை கைது செய்து அழைத்து சென்றனர்.

தற்போது பினூப் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours