ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
மருத்துவத் துறையில் முதலிடம் பெற்ற மஹ்மூத் மாணவி பாத்திமா ஸப்றீனுக்கு பாராட்டு !
அட்டாளைச்சேனை மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளுக்காக எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுக்கினார் !
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் கொவிட் -19 தொற்று காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை காரணமாக அன்றாடம் நோயாளர்களுக்கு சிகிச்சைக்கான குருதி வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தலசீமியா நோயாளர்கள், புற்றுநோயாளர்கள், அத்துடன் கற்பகாலத்தில் ஏற்படும் குருதியிளப்பு, விபத்துக்களின் போது ஏற்படும் குருதியிளப்பு நிலமைகளின் குருதியை வழங்க வேண்டிய தேவையுள்ளதுடன் இதேவேளை களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து குருதி வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே குருதி வழங்க விரும்பும் கொடையாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலயின் இரத்த வங்கி பிரிவுக்கு வருகை தந்து குருதியினை வழங்கமுடியும் இதேவேளை இரத்ததானம் செய்வதற்கு விரும்பும் பொதுமக்கள் 065-2226116 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இரத்ததானம் செய்வதற்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும் என வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours