மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் உரம் மற்றும் கிருமி நாசினிகளின் விலை திடீரென அதிகரித்து இருப்பதனால் தாங்கள் உரம் மற்றும் கிருமி நாசினிகளைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் கஷ்ரப்படுவதாக அம்பாரை மற்றும்  மட்டக்களப்பு மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்ளும்; விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அண்மைக்காலமாக விவசாயச் செய்கைக்குப் பயன்படுத்தும் யூரியா வகை உரம் மற்றும் களைகளுக்குப் பயன்படுத்தும் களைநாசினி மற்றும் கிருமிநாசினிகள் ஒருசில வாரங்களாக ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்டதனை விட இரட்டிப்பான தொகையில் கடைகளில்  விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

 அதாவது களைக்குப் பயன்படுத்தப்படும் ரெட்ரீஸ் எனப்படும் களைநாசினி கடந்த வாரம் 2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 4900 ரூபாவிற்கு  கடைகளில் விற்பனையாகுவதாகவும் யூரியா உரம் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 2500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்துவதுடன் இந்த நிலைக்கான காரணம் யார் கடை முதலாளிகளா, அல்லது அதன் கம்பனிகளா அல்லது அரசாங்கமா என்பதனை புரியாமல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு திடீரென  உரம்,களைநாசினி மற்றும் கிருமி நாசினிகளினது விலை அதிகரிக்கப்பட்டமையால் கடன் பட்டு விவசாயத்தினை மேற்கொள்ளும் விவசாயிகள் பெரும் நஷ்ரத்தினை எதிர்நோக்கவேண்டிய நிலை வருவதுடன் எதிர்காலத்தில் விவசாயச் செய்கையினை கைவிடவேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உரம், கிருமிநாசினி மற்றும் களைநாசினிகளின் விலைகளை அதிகரிப்பினை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours