மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று 31.05.2021 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து குறித்த பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தனர்.




இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக், இராணுவ தரப்பு உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சனி, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்  திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.








Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours