(சா.நடனசபேசன்)


அமைப்பின்  ஸ்தாபகத் தலைவர்  சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது அனுசரணையில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ( எஸ்டா ) ஊடாக கல்விக்கு உதவி வழங்கப்பட்டது .

க .பொ .த (உ /த ) உயிரியல் விஞ்ஞான பிரிவில் 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள மட்டக்களப்பை சேர்ந்த மாணவி தற்போதைய covid 19 அசாதாரண சூழல் காரணமாக Zoom class மூலம் கற்றலை தொடர வேண்டிய நிலையில் அதற்கான நிதி வசதி இன்மையால் எஸ்டா அமைப்பிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அம்மாணவி பரீட்சை எழுதும் வரைக்குமான கற்றல் செலவுகளை மாதாந்தம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன் முதற் கட்டமாக இந்த மாதத்திற்கான 5800/= வங்கியில் வைப்பில் இடப்பட்டு இன்று தொடக்கம் மாணவி கற்றலில் ஈடுபட வசதி செய்து கொடுக்கப்பட்டது .இந்த மாணவி கா பொ த (சா /த ) பரீட்சையில் 9A சித்தியினைப் பெற்றவர் என்பதுடன் எதிர்காலத்தில் வைத்தியர் ஆகுவதே தமது இலக்கு என கூறியமை சந்தோசமான விடயமாகும் .இவரின் கல்வி சிறக்க இறைவனை வேண்டுவதுடன் இவருக்கான உதவிகள் எதிர்காலத்திலும் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்பதனை அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் அ.வசிகரன் தெரிவித்தார்

மற்றும் ESDAஅமைப்பின் ஊடாக அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது அனுசரணையில் பிரத்தியேக வகுப்புக்காக 5 ம் ஆண்டு,O/L,A/L,university,என்று மொத்தம் 12 மாணவர்கள் கல்வி கற்றுகொண்டு வருகிறார்கள் , என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours