நேர்காணல்  -(திருக்கோவில் நிருபர் எஸ்.கார்த்திகேசு)


பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் ஊடாகவே தங்கள் பக்க நியாயங்களை முழுமையாக வெற்றி கொள்ளமுடியும்

-பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.டி.சாபுறாஉம்மாவுடனான நேர்காணளில் தெரிவிப்பு-

அம்பாறைமாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் பொத்துவில் 7 எனும் கிராமசேவையாளர் பிரிவில் இருந்துசமூகம் அரசியல் ஊடாகபெண்களுக்குமுன்மாதிரியாகசெயற்பட்டுபெண்களின் தேவைகளைநன்கு அறிந்து பெண்களுக்கான சேவைகளை முன்னெடுத்துவருகின்ற பொத்துவில் பிரதேசசபையின் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியபட்டியல் உறுப்பினரான எஸ்.டி.சாயுறாஉம்மாவுடனான சமூக அரசியல் பயணங்கள் தொடர்பான நேர்காணல்.

வினா– 01

உங்களைப் பற்றியும் குடும்பபின்னணிகள் பற்றி கூறுங்கள்

நான் பொத்துவில் பிரதேசத்தில் 1968ஆம் ஆண்டுசரிபுத்தம்பிநாகூர் உம்மாதம்பதிகளுக்குமுன்றாவதுமகளாவேன். எனதுஆரம்பகல்வியைபொத்துவில் அலிர்பான் பாடசாலையில் ஆரம்பகல்வியையும் இடைநிலைக் கல்வியைபொத்துவில் தேசியமத்தியகல்லூரியிலும் பயின்று இருந்தேன்.பொத்துவில் 7 கிராமசேவையாளர் பிரிவில் எனது சேவையை மேற்கொண்டு வருகின்றேன்.எனது பாடசாலைக்காலம் முதல் பொதுப்பணிகளில் ஈடுபடுவதுஎன்பது எனக்குமிகவும் பிடித்தமான ஒருசெயலாக இருந்துவருகின்றன.

வினா– 02

உங்களுடையசமூகஅரசியல் பிரவேசத்தில் குடும்பஉறவுகளின் ஆதரவுகள் எவ்வாறுஉள்ளது?

எனது பெற்றோர்கள் எனது சமூகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்துவந்திருந்தனர்.திருமணத்தின் பின் கணவர் மற்றும் பிள்ளைகளின் ஆதரவுகள் மிகவும் என்னை ஊக்கப்படுத்தும் விதமாகவே இன்றுவரை இருந்துவருகின்றன.இதன் காரணமாகவே என்னால் இறைவனின் துணையுடன் பலசவால்களுக்கு மத்தியில் சமூகமற்றும் அரசியல் ரீதியாக செயற்படவும் அந்தபணிகளின் முழு திருப்திகரமானவெற்றியையும் பெற்றுக் கொண்டுஎன்னால் பயணிக்ககூடியதாக இருக்கின்றன.



வினா– 03

நீங்கள் சமூகசேவைக்குள் எவ்வாறு உள்ளீர்க்கப்பட்டீர்கள் என்பதனை கூறமுடியுமா?

நான் முதல் முதலாக 1988.12.01 ஆம் திகதி சனசக்திதிட்டத்தின் கிராம மட்டஅமைப்பில் எனது இருபதாவது வயதில் ஒருஅங்கத்தவராக இணைந்து கொண்டேன். அந்த அமைப்பின் 50 நபர்கள் இணைந்துகொண்ட ஒரு சங்கமாக செயற்பட்டுவந்தது.

அந்தசங்கத்தின் ஊடாகசிரமதானப் பணிகள் பொது நிகழ்வுகளை நடாத்துதல் மற்றும் வறியகுடும்பங்களுக்குஉதவிகள் வழங்குதல் போன்றபணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. இது என் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்ததுடன் தொடர்ந்தும் நான் சமூகசேவைகளில் முழு நேரமாக செயற்படத் தொடங்கியதுடன் தற்போதும் சமுகப் பணிகளை முன்னெடுத்துவருகின்றேன். எனது சேவைகளை பெரும்பாலும் பெண்களை இலக்காகக் கொண்டேமுன்னெடுத்துவருகின்றேன்.

வினா– 04

சமூகசேவையில் ஈடுபட்டுவந்த உங்களுக்கு எவ்வாறு அரசியல் பிரவேசம் ஏற்பட்டது?

நான் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பெண்கள் மகளீர் பிரிவின் கிராம மட்டமகளீர் சங்க தலைவியாக இருந்து பெண்களின் பிரச்சினைகள் உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுவேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தேன். அவ்வாறு நான் பெண்கள் சார்ந்த பணிகளை முன்னெடுத்துவரும் நிலையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நான் உட்பட மூன்று பெண்களின் பெயர்களை தெரிவுசெய்து பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அனுப்பிவைத்திருந்தார்கள். இந்நிலையில் நான் 2018ல் தேசிய முஸ்லிம் காங்கரஸ் கட்சியில் போட்டியிட்டு சுமார் 800 வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் கட்சியின் தேசியபட்டியலில் எனக்கு ஆசனம் வழங்கப்பட்டு தற்போது பொத்துவில் பிரதேசசபையின் உறுப்பினராக செயற்பட்டுவருகின்றேன்.

வினா- 05

சமூகமற்றும் அரசியல் சேவையில் பெண்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளன?

இலங்கை அரசியலில் பெண்களின் பங்குபற்றுதல் மிகமிகக் குறைவாக இருந்துவருகின்ற நிலையில் அரசினால் கட்டாயம் பெண்களின் பிரதிநிதித்தவம் 25 வீதம் உள்வாங்கப் படவேண்டும் என்ற நிலைப்பாடு என்பது மிகவும் வரவேற்கக் கூடியதாக இருக்கின்றன.இதனைபயன்படுத்திக் கொண்டு பெண்கள் அரசியலில் பங்குதாரர்களாக மாறிதங்கள் பக்கநியாயங்கள்,உரிமைகள் மற்றும் அபிவிருத்திகள் போன்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே பொத்துவில் பிரதேசத்தில் முன்மாதிரியான பெண்ணாக எனது சமூகபணிகளுடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருவதில் மகிழ்ச்ச pஅடைகின்றேன். எனது இந்தச மூகஅரசியல் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக அமைந்திருப்பதும் எனது பயணத்தின் வெற்றிக்கு வலுச்சேர்த்துவருகின்றன.

பொத்துவில் பிரதேசத்தில் நான் மேற்கொண்டுவரும் சமூகமற்றும் அரசியல் ஊடான பணிகளுக்கு அங்கிகாரம் வழங்கும் வகையில் பல சமூகசேவைகள் அமைப்புக்கள் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் போன்றன எனக்கு பொன்னாடைகள் போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவித்து உள்ளமையும் எனது பணிக்குகிடைத்த அங்கீகாரம் என நான் மகிழ்ச்சிஅடைகின்றேன்.


வினா– 06

நீங்கள் மேற்கொண்ட சமூகமற்றும் அரசியல் பணிகள் பற்றி கூறமுடியுமா?

நான் ஆரம்பத்தில் சனசக்தி அமைப்பிலும் அதனைத் தொடர்ந்து சமூர்த்திமற்றும் மகளீர் சங்கங்கள் ஆகியவற்றின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி வேலைளை முன்னெடுத்து வந்திருக்கின்றேன். குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலான பணிகளை முன்னெடுத்து வந்துள்ளேன். இந்தவகையில் 37 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன். மற்றும் 100 பெண்களுக்கு சுகாதாரமானகுடி நீரைபெற்றுக் கொள்ளும் நோக்கில் நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இதே வேளை நான் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் எனக்கு ஒதுங்கீடு செய்யப்பட்ட நிதியின் ஊடாக நகர அபிவிருத்திதிட்டத்தின் கீழ் 6 வீதிகள் கொங்றீட் வீதிகளாக புனரமைத்துள்ளதுடன் பாடசாலை,முன்பள்ளி பாடசாலைமற்றும் விளையாட்டுகழகம் என்பனவற்றிற்கும் நிதிகள் ஒதுங்கீடு செய்து அபிவிருத்திகள் மேற்கொண்டுள்ளேன்.

அத்தோடு 110 பெண்களுக்குபொத்துவில் பிரதேச சபையின் நிதி உதவியுடன் வாழ்வாதார உதவிகள் வழங்கி பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்காக உந்துசக்தியாகவும் நான் செயற்பட்டுவருகின்றேன். மேலும் இவ்வாண்டுக்கான நிதி ஓதுக்கீட்டில் வீதிபுனரமைப்பு,வீதிவிளக்குகள், 40 வறியகுடும்பங்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் இதரஅபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான திட்டமுன் மொழிவு ஒன்றினையும் பொத்துவில் பிரதேசசபையில் சமர்ப்பித்து இருக்கின்றேன்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours