(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)


தம்பிலுவில் தேசிய கல்லூரியின் புதிய அதிபராக பா.சந்திரேஸ்வரன் நியமனம்.

அம்பாரை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா விதிதியாலயத்தின் (தேசிய கல்லூரி) புதிய அதிபராக தம்பிலுவிலைச் சேர்ந்த ஆங்கில கல்விமாணி பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாரை திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தனது பாடசாலைலைக் கல்வியை நிறைவு செய்து 1984 ஆம் ஆண்டு ஆங்கில ஆசானாய் முதல் நியமனம் பெற்று பொத்துவில் ஏற்றம் பாடசாலையில் தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 1985ஆம் ஆண்டு பொத்துவில் மெதடிஸ்த மிசன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்று 1990ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பணியை முன்னெடுத்து இருந்தார்.

இதனையடுத்து தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று 2003ஆம் ஆண்டுவரை கடமையாற்றி இருந்ததுடன் 2010ஆம் ஆண்டு விநாயகபுரம் பாலக்குடா பாலவிநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகவும் பின் 2010ல் இருந்து 2015ஆம் ஆண்டுவரை தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரில் பிரதி அதிபராகவும் தனது கல்விச் சேவையினை முன்னெடுத்து வந்துள்ளதுடன் அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் சிரேஷ்ட நிருவாக உறுப்பினரும் இருந்த சமூக ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் 03 06 2021ந் திகதியில் இருந்து தம்பிலுவில் தேசிய கல்லூரியின் புதிய அதிபராக பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் (பாபு) நியமிக்கப்பட்டள்ளதுடன் இவ் நியமனமானது தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்ய நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவின் அடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் இவ் அதிபர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours