(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு கரடியனாறு கித்துள் காட்டுப்பகுதியில்  காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு கரடியனாறு கித்துள் காட்டுப்பகுதியில்  காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை(9)அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் காட்டு யானையின் தாக்குதலில் கரடியனாறு கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பொன்னுத்துரை-கௌகீகரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை(8)மாலை 6.00 மணியளவில் தமது வேளாண்மை செய்யப்பட்ட இடமான கித்துள் வயல்வட்டைப் பிரதேசத்திற்கு சென்று  வயலில் அமைக்கப்பட்டுள்ள குடிசைக்குள் இருந்து வயல் காவலில் ஈடுபட்டிருந்தார்.இதன்பின்னர் வயல் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தபோது காட்டு யானையினால் காரசாரமாக தாக்கப்பட்டு தூக்கியெறியப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலே குறித்த விவசாயி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை குறித்த பகுதிக்கு சென்ற விவசாயிகள் அவதானித்து உரிய குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.இவ்வாறு இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டெடுத்து  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours