சின்வத்தை வட்டாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு அமோ வரவேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தை ஊழலற்ற,சிறந்தொரு மாவட்டமாக மாற்றியமைப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
பற்றிமாவின் 125 வது ஆண்டு நிறைவு நிகழ்வில் புதியதொரு உதவும் திட்டம்
களுவாஞ்சிகுடியில் தேசிய மக்கள்சக்தி கட்சியின் வட்டார அலுவலகம் திறக்கப்பட்டது
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல் பதிவு
மருதமுனை பிரதேச சமூக சேவைப் பரப்பில் மிகவும் ஆழமாகத் தன்னை தடம் பதித்து சமூக சேவைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து மருதமுனை மண்ணுக்குப் பெரும் சேவையாற்றிய சமூக சேவையாளர்,மருதமுனையின் மூத்த பிரஜைகளில்;; ஒருவர் அபூபக்கர் அப்துல் ஹமீட்(தோழர் இஸ்மாயில்)அவர்கள்.
மருதமுனையில் ஜனாஸா என்றால் முதலில் ஞாபகம் வருவது தோழர் இஸ்மாயில்தான் யார் மரணித்தாலும் மரணவீட்டில் அவர் இருப்பார்.உடனடியாக கப்று வெட்டுவது முதல் குளிப்பாட்டுதல்.கபனிடுதல்,உள்ளீட்ட அனைத்துக் கடமைகளையும் தானே முன்னின்று பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் செய்து முடிப்பார்.
இவர் 1941-09-24ஆம் திகதி மருதமுனையைச் சேர்ந்த அபூபக்கர்,செய்லத்தும்மா தம்பதிக்கு மகனாக மருதமுனையில் பிறந்தவர்.
மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயம்;,(தற்பொழுது அல்மனார் தேசிய பாடசாலை)பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவருமான இவர் சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர்.
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்த காலத்தில் இருந்தே இவரது ஜனாஸா நல்லடக்கப் பணி ஆரம்பமாகியிருக்கின்றது.இவரது ஐம்பது வருடகால சமூக சேவைப் பணியில் மருதமுனை மையவாடிக்கு முப்பது வருடங்கள் தனது அர்பணிப்பு மிக்க சேவையைச் செய்துள்ளார்.
1990ஆம் ஆண்டு மருதமுனை மையவாடியைப் பொறுப்பெற்ற இவர் இந்த மையவாடியை சுத்தமாக வைப்பதிலும் மரங்களை நடுவதிலும் அதிக அர்வம் காட்டி செயற்பட்டுள்ளார்.அரசியல் வாதிகள்,சமூக சேவையாளர்கள்,தனவந்தர்கள் ஊடாக இந்த மையவாடிக்கான சுற்றுமதில்,மின்சாரம்,குளாய் நீர்வசதி,ஜனாஸா நல்லடக்கத்திற்கான தளபாடங்கள் மற்றும் ஒலிபெருக்கி வசதிகளையும் ஏற்பாடு செய்தார்.
மேலும் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையிலான மருதமுனை மிமா சமூகசேவை அமைப்பின் ஊடாக 2009ஆம் ஆண்டு மையவாடி வளாகத்தில் சிறிய கட்டம் ஒன்றை அமைப்பதற்கும் தோழர் இஸ்மாயில் ஏற்பாடு செய்தார்.அது மாத்திரமன்றி மையவாடியைச் சுற்றி தென்னை மரங்களையும்,நிழல்தரும் மரங்களையும் நடுகை செய்துள்ளார்.
இந்த மரங்களுக்கெல்லாம் காலையும்,மாலையும் நீரூற்றி வளர்த்துவிட்ட பெருமையும் இவரையே சாரும்.சாதாரண கூலித்தொழிலாளியான இவர் தொழில் தவிர்ந்த ஏனைய நேரங்களையெல்லாம் இந்த மையவாடியைப் பரமரிப்பதற்கே செலவு செய்துள்ளார்.இந்தப் பணிகளுக்காக இவர் யாரிடமும் கூலியாக எதையும் பெற்றதில்லை.
தனது கூலித் தொழில் மூலம் கிடைக்கின்ற வருமானத்திலும் ஒரு பகுதியை வசதி குறைந்த மாணவர்களுக்கும்,வசதி குறைந்த குடும்பங்களுக்கும் உதவிகளைச் செய்து வந்தவர்.நல்ல வாசகனான இவரை காலை ஏழு மனிக்கெல்லாம் பத்திரிகைக் கடையில் காணமுடியும்.அதே போன்;று நூல் வெளியீடுகளிலும் முன்வரிசையில் அமர்ந்து நூல்களை வாங்குவதில் முனைப்புக் காட்டியவர்.
அகில இலங்கை சமாதான நீதவானாகி இவர் சில காலம் சுகவீனமுற்றிந்த நிலையில் இன்று 2021-06-08ஆம் திகதி மாலை இறைவனடி சேர்ந்தார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் மஃரிப் தொழுகையின் பின்னர் இவர் பார்த்துப் பார்த்துப் பராமரித்து அழகு பார்த்த மருதமுனை மையவாடியில் இடம்பெற்றது.
குறிப்பு
இவர் பற்றி இன்னும் விரிவான தகவர்கள் விரைவில் பதிவெற்றம் செய்யப்படும்.
Post A Comment:
0 comments so far,add yours