கால்பந்து மைதானங்கள், நான்கின் அளவைக்கொண்ட சிறுகோள் ஒன்று, இன்று இரவு 11.21 மணிக்கு பூமி அருகே கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

விண்வெளியில் இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கமாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவற்றில் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும்.

எனவே பூமிக்குள் வருவதற்குள் அது எரிந்து சாம்பலாகி விடுவதும் உண்டு. அதையும் மீறி முழுமையாக எரியாமல் பூமியில் விழும் கற்களும் உள்ளன.இந்தநிலையில் கால்பந்து மைதானங்கள் நான்கின் அளவுக்கு பெரிதான சிறுகோள் ஒன்று, இன்று இரவு 11.21 மணிக்கு பூமி அருகே கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். '

2008 G20' என்ற சிறுகோள் இன்று இரவு 11.21 மணியளவில் பூமி அருகே கடந்து செல்ல உள்ளது. ஆனால் அது பூமியுடன் மோதிவிடும் என அச்சம் கொள்ள அவசியமில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

ஏனெனில் 97 மீட்டர் அகலம், 230 மீட்டர் நீளம் கொண்ட அந்த குறுங்கோள், மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், பூமியில் இருந்து 45 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது.

இதே சிறுகோள், 1935ஆம் ஆண்டு 19 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும், 1977ஆம் ஆண்டு 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும் கடந்து சென்றதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours