(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கையின்  வரலாற்று சிறப்புமிக்க  கதிர்காமம் கந்தன் ஆலயயத்தின்  வருடாந்த ஆடிவேல்விழா  உற்சவத்தையொட்டிய கொடியேற்ற நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (10) மாலை சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.

வழமைபோல கதிர்காமம் ஆலய வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலில் இக்கொடியேற் நிகழ்வு எளிமையாக இடம்பெற்றது. நான்கு சமயத்தலைவர்களும் கலந்துகெண்டு  ஆசியுரைகளை வழங்கியிருந்தனர்.

முன்னதாக கொடிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு பள்ளிவாசலில் சுற்றி ஊர்வலரமாக எடுத்துவரப்பட்டு சமயத்தலைவர்களால் அது ஏற்றிவைக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் கொவிட் தாக்கம் காணரமாக கொடியேற்றம் தொடக்கம் தீர்த்தோற்சவம் வரையிலான காலப்பகுதியில் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய  10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆடிவேல்விழா உற்சவங்கள் எதிர்வரும்  23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
கதிர்காமஉற்சவ திருவிழாக்காலங்களில் ஆக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours