(எம்.என்.எம்.அப்ராஸ், றாசிக் நபாயிஸ், சர்ஜூன் லாபீர்)


சமாதானமும் சமூகப்பணி் அமைப்பின் (PCA)

அனுசரணையுடன் இயங்கும் கல்முனைப் பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விசேட ஒன்றுகூடல் அம்பாறை மாவட்ட மற்றும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் பிரதேச இனைப்பாளர்  எஸ்.எல்..அஸீஸ் தலைமையில் நிகழ்வு கல்முனை ஹிமாயா வீச் ஹோட்டலில் 

(11) நடைபெற்றது




இறை பிராத்தானையுடன் ஆரம்பித்த ஒன்றுகூடலானது பின்னர் அண்மையில் கொரோனா தொற்று காரணமாககாலஞ் சென்ற 

காரைதீவு பிரதேச நல்லிணக்கமன்றத்தின்

 இணைப்பாளர் பிரபல சமுகசேவையாளர் தேசமான்ய விபுலநேசன் லயன் சின்னதம்பி தங்கவேல் அவர்களைநினைவு கூறும் வகையில் ஒரு நிமிட  

மெளன அஞ்சலி இடம்பெற்றது.


பின்னர் பிரதேச நல்லிணக்க மன்ற கடந்த கால மற்றும் எதிர்கால நடவடிக்கை  

தொடர்பிலும் இளைஞர்கள் மத்தியில் 

மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்க 

முன்னெடுப்புக்கள்  மற்றும்  இனங்களிடைய மேற் கொள்ள வேண்டியநல்லிணக்க ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகள் இங்குகலந்தோலாசிக்கப்படட்து.



இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான்,சமாதானம்  சமூக பணி அமைப்பின்(PCA) இணைப்பாளர் டி.இரஜந்திரன் , சமாதானநல்லிணக்க அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எல்..மாஜீத் கல்முனை பிரதேச நல்லிணக்ககுழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் 

கலந்து கொண்டனர்.


கொரோனா தொற்று நிலை காரணமாக நீண்ட நாட்களின் பின்னர்  இவ் ஒன்றுகூடல் சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours