த.தவக்குமார்

வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வாழைக்காலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர்களை சுற்றிவளைத்த போது புல்டோசர் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பிரதேசத்தில் புல்டோசர்களைக்கொண்டு நீண்டகாலங்களாக ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வினை மேற்கொண்டு விற்பனையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்;ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,உதவி பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அவர்கள்  மண் அகழ்விற்கு பயன்படுத்திய புல்டோசர் ஒன்று மிட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தப்பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதனால் அப்பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்கள்,மக்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வீதிகள் நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட புல்டோசர் நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours