(க.விஜயரெத்தினம்)


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழுவின் உறுப்பினரும்,கட்சியின் மகளீர் அணி செயலாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய திருமதி. செல்வி மனோகர்(வயது-48) இன்று(18)கொழும்பு மகரகம வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்தநிலையில் காலை 11.00 மணியளவில்  உயிரிழந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்தவரும்,கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலையின் பழைய மாணவியும் ஆவார்.கல்லடி விவேகானந்தா மகளீர் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளராகவும் இருந்து பாடசாலைக்கு பல அபிவிருத்திக்கு வித்திட்டதோடு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு காத்திரமான பல பணிகளை முன்னெடுத்தும்,மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் துன்ப,துயரங்களை உலகறியச் செய்தும்,பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு குரல்கொடுத்து பல போராட்டங்களை முன்னெடுத்து பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தீர்க்கமான முறையில் செயற்பட்டவர்.

கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் சிறையில் அடைக்கப்பட்ட வேளை கட்சியில் உள்ளவர்களையும்,பெண்களையும் ஒன்றுதிரட்டி பிள்ளையானின் விடுதலைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான செல்வி மனோகர் மட்டக்களப்பு மண்ணில் பல சமூக,சமய ரீதியாக பல சமூகப்பணிகளை முன்னெடுத்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours