(வி.ரி.சகாதேவராஜா)


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் இல்லம் நேற்றுமுன்தினம்(26) மாலைப்பொழுதில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டது.

திலீபன் நினைவுதினத்தன்று மாலைவேளையில் இம் முற்றுகை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரியநீலாவணையிலுள்ள  உறுப்பினர் ராஜன் வீட்டில் இல்லாதவேளை அங்கு வந்த பொலிசார் வீட்டினுள் புகுந்து தேடுதல் நடாத்திவிட்டு ,அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகனிடம் விசாரித்துள்ளனர்.

அவர் வெளியே சென்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும் பொலிசார் சுமார் 4மணிநேரம் அங்கு வீட்டைச்சுற்றி நின்றிருந்தனர்.

தனியாக இருந்த அவர்கள் 4மணிநேரம் பதட்டத்துடன் இருந்ததாககூறப்படுகிறது.

இதுவிடயம் தொடர்பில் உறுப்பினர் ராஜனிடம் கேட்டபோது தானில்லாதசமயம் இவ்வாறு நடந்துகொண்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராஜன் மேலும் கூறுகையில் கல்முனைப்பொலிசார் 25ஆம் திகதி என்னிடம்வந்து என்னை தகாதவார்த்தiயினால் திட்டிவிட்டு பயம்காட்டி உயிர்அச்சுறுத்தல விடுத்து தடைஉத்தரவினை கையளித்துச்சென்றனர். மறுநாள் மாலை 4.30மணியளவில் கல்முனைப்பொலிசாரும் பச்சைஉடை தரித்த ஆயுதம் தாங்கியவர்களும் எனது வீட்டிற்கு வந்து சுற்றிவளைத்து நின்றிருக்கின்றனர். இரவு 8.30 மணிவரை நின்றுவிட்டு மனைவியிடம் விசாரித்துச்சென்றுள்ளனர். நான் வெளியே சென்றுள்ளதனால் அவர்களைக்காணமுடியவில்லை.எனவே உயிர் அச்சுறுஞத்தலை எதிர்நோக்கியுள்ளே;. எனக்கு மனிதஉரிமை ஆணைக்குழுவால் நிம்மதியாக வாழ வகைசெய்யவேண்டும்.  என்றார்.

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் எ.அசீஸிடம் முறைப்பாடு நேற்று யையளிக்கப்பட்டது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours