எதிர்வரும் 13.09.21 திங்கள்முதல் மகுடநுண்ணித் தொற்றிற்கு (கோவிட்) தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், தொற்றுநோயிலிருந்து குணம் அடைந்தவர்களும், நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டவர்களும்மட்டுமே பொது வாழ்விடங்களில் நுழையலாம்.

16 வயதிற்கு உட்பட்டோருக்கு இச்சான்றிதழ் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசிச்சான்று எத்துறைகளுக்கு கட்டாயமாக்கப்படுகின்றது?

தங்குவிடுதிகளின் உள்ளரங்குகளில், மதுநிலையங்கள் மற்றும் உணவகங்கள், அதுபோல் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிலையங்கள், நாடக அரங்கு, திரையரங்கு, சூதாட்ட விடுதிகள், நீச்சல்நிலையங்கள், அருங்காட்சியங்கள், விலங்குகாட்சிசாலை, இதுபோன்றவற்றிக்கும் தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படுகின்றது.

உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளும் (இசைக்கச்சேரி, விளையாட்டு நிகழ்வு, மன்ற நிகழ்வுகள், பொது இடத்தில் நடைபெறும் தனியார் திருமண விழாக்கள், என்பனவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ் எதிர்காலத்தில் கட்டாயமாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours