( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு   ராமகிருஷ்ண மிஷன் நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நிகழ்வாக கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில், மன்னார் மாவட்டத்தில் முதல்தடவையாக  நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏறக்குறைய 7.5 லட்சம் ரூபாய் செலவில் 500 குடும்பங்களை சார்ந்த 2500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பணிகள்  நடைபெற்றுள்ளன.

இ.கி.மிசன் கல்லடி ஆச்சிரம உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ இந்நிவாரணப்பணியை ஒருங்கிணைத்து வழங்கிவைத்தார்.

மன்னார் மாவட்டத்தில், முதன்முறையாக 400 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் ரூபாய் 1500 வீதம் வழங்கி வைக்கப்பட்டது.  அரிசி  பருப்பு சோயா சீனி தேயிலைத்தூள்   சமபோசா போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.


செம்மண் தீவு ,தேத்தாவடி ,கணேசபுரம் ,தீவு பிட்டி , தாராபுரம், சபரிகுளம், வெள்ளாங்குளம் உட்பட 9 மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்ட ஒரு தொகுதிக்கு முதற்கட்ட நிவாரண பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன .


மட்டக்களப்பு  ராமகிருஷ்ண மிஷன்  முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் மன்னார் மாவட்ட ராமகிருஷ்ண மிஷன் பக்தர்களோடு இணைந்து, மன்னார் நலிவுற்றோர் நலன் காப்பு நிதிய தொண்டர்கள் மற்றும் திருமதி  நல்லம்மாள் நினைவு- நேயம் அறக்கட்டளை தொண்டர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours