(மண்டூர் ஷமி)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் வீடொன்றிலிருந்து நேற்று சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில்
நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டில் இருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி நிகழ்நிலையூடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது நிகழ்நிலையூடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை உயிரிழந்த நிலையிலிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக உயிரிழந்த சிறுமியின் சகோதரி மற்றும் அந்த வீட்டுக்கு வந்து செல்லும் இளைஞன் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேறகொள்ளப்பட்டு வந்த நிலையில்

இன்று குறித்த சிறுமியின் சடலத்தினை மட்;டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் அ.இளங்கோவன் தலமையிலான சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்திற்காகான காரணம் கண்டறியப்படாத நிலையில் சிறுமியின் ;உடற்கூறுகள் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உடல் இறுதி நல்லடத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours