(வி.ரி.சகாதேவராஜா -)
கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த ஒருதொகுதி அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் நேற்று(8)வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
நேற்று திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மண்டானை மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய கிராம மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிபிரதேசசெயலாளர் க.சதிசேகரன் தவிசாளர் கி.ஜெயசிறில் நிவாரணப்பணி ஒருங்கிணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours