சம்மாந்துறை வலயத்தில் 39பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதிதிறக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதிபர்களுக்கு 'சூம்' தொழினுட்பமூலம் சகலஅறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.கல்வி அதிகாரிகளாகிய உங்களுக்கு முக்கிய கடமைஇருக்கிறது. அன்று காலை 9.30மணிக்கு முன் பாடசாலைக்கு வருகைதந்த அதிபர் ஆசிரியர் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவரது வரவுஅறிக்கை அனுப்பப்படல்வேண்டும்.
குறித்த கூட்டம் நேற்று (18)வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் வழிகாட்டலில், பிரதிவலயக்கல்விப்பணிப்பாளரான எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது. பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எ.நசீர் ,யு.எல்.றியாழ் ஆகியோரும் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினர்.
கொவிட்தடுப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பதாதைகள் துண்டுப்பிரசுரங்கள் செய்திக்குறிப்புகள் அனைத்தும் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 20ஆம் 28ஆம் திகதிகளில் பாடசாலைச்சூழலில் பாடசாலைதிறப்பது தொடர்பாக ஒலிபெருக்கிமூலம் பொதுஅறிவிப்பு செய்யவேண்டும். இதனை கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் பொறுப்பேற்கவேண்டும்.
முதலிருவாரங்களில் மாணவர்களுக்கு கற்பித்தலில் அழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடாது. மாறாக அவர்கள் சுயாதீனமாக சுதந்திரமாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கேற்றவிதமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.கற்பித்
.
தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழையமுடியாது. அதைவிட தடுப்பூசி போடப்படாத பெற்றோர் கல்விசாரா ஊழியர்கள் யாரும் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது.
ஆசிரியர்கள் தொழிற்சங்கப்போராட்டம் என்று ஏதாவது சமுகமளிப்பின்மை இடம்பெற்றால் அதனை எதிர்கொள்ளுமுகமாக பிரதேசசெயலகங்களிலுள்ள அபிவிருத்திஉத்தியோகத்தர்களின் சேவையை பெறுவது தொடர்பாகவும் ஆளுநர் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
Post A Comment:
0 comments so far,add yours