( வி.ரி.சகாதேவராஜா)
கடந்த ஜந்துமாதகால கொரோனா விடுமுறையின் பின்னர் மீண்டும் கடந்த திங்களன்று முன்பள்ளிகள் கிழக்கில் திறக்கப்பட்டன.
கடந்த திங்களன்று(11) குறித்த பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு கிழக்கு முன்பள்ளிவாரியம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக சுகாதார முறைப்படி அவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பமானநாள்முதலே கூடுதலான சிறுவர்சிறுமியர் பாடசாலைக்கு வருவதில் அதிகமுனைப்புகாட்டினர்.பெற்றோர் களும் அதிகஆர்வம்காட்டினர்.நீண்டகாலமா க வீட்டில் அடைபட்டுக்கிடந்த சிறுவர்கள் குதூகலமாக பாடசாலைக்கு வருவதைக்காணமுடிந்தது.
சிறுவர்கள் கைகழுவுதலுடன் மாஸ்க் அணிந்து, சமுகஇடைவெளியுடன் பழகுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகள் தோறும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் சென்று மாணவர்களுக்கான அறிவுரைகளை தெளிவுபடுத்திவருகின்றனர்.
காரைதீவு விபுலாநந்தா மொன்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் ,நேற்று(14) பிரதேச பொதுச்சுகாதாரபரிசோதகர் பாடசாலையில் கொரோனாத்தவிர்ப்பு செயற்பாட்டிற்காக சிறுவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனும் அறிவுறுத்தல் செய்தியை வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours