(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 83 சதவீதமான மாணவர்கள் சித்தி பெற்றிருப்பதாகவும் அதில் 78 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். ஜாபிர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஏ. பவாஸ், ஏ.எம். அனூப் அஹமத், ஏ.ஏ. ஆகீப் அஹமத், பீ. முஹம்மத் சிபாக், எல்.எம்.எம். அஸ்ஜத் அஹமத், எம்.ஏ. அஹமத் அதீப், எம்.எம்.எம். அஸ்ரிப் இலாஹி, எம்.என். சாஹீன் அஹமத், ஆகிய 8 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் என். நிஷாத் சஹ்ரான் என்ற மாணவன் இருமொழி மூலமுமாக 9 பேர் 9ஏ சித்தியும், 8ஏ சித்தி பெற்ற 10 பேரில் 8பேர் தமிழ் மொழி மூலமாகவும் 2 பேர் இருமொழி மூலமாகவும், 7 ஏ சித்தி பெற்ற 11 பேரில் 10 பேர் தமிழ் மொழி மூலமாகவும் ஒருவர் இருமொழி மூலமாகவும்'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.

கல்லூரியின் முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை எடுத்து அயராது பாடுபட்டு வரும் கல்லூரியின் அதிபர் ஜாபிர், கடந்த 2020 ஆம் வருடம் நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் -19 இனால் பாடசாலைகள் முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை நிகழ்நிலை மூலமாக நடாத்திய பாடசாலையின் ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் போன்றோருக்கும் வீடுகளில் முடங்கியிருந்த தமது பிள்ளைகளுக்கு படிக்கும் சூழலை அமைத்து வழி நடாத்திய பெற்றோருக்கும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பழைய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் நன்றிகளைத்  தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours