(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)
அம்பாரை திருக்கோவில் பொலிஸ் நிருவாகப் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக ஈ-றபீக் செயலி ஊடாக பொலிசாருக்கு அறிவிக்கும் முறையை பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விழிப்புணர்வு ஒன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இவ் விழிப்புணர்வு நிகழ்வானது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யோ.தனுஷான் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) திருக்கோவில் மணிக்கூட்டு சந்தியில் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
திருக்கோவில் பிரதேச பிரதான வீதிகள் மற்றும் சில உள் வீதிகளிலும் கனரக வாகனங்கள் வேகமாக செலுத்தப்படுவதாகவும் இதன் காரணமாக வீதிகளில் பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கில்கள் பாடசாலை மாணவர்கள் வயோதிபர்கள் உட்பட பாதசாரிகள் அச்சம் தெரிவிப்பதாகவும் இங்கு தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை தடுக்கும் வகையில் ஈ.றபீக் எனும் இணையவழி செயலியைப் பயன்படுத்தி போக்குவரத்து விதி மீறுகின்ற வாகனங்களை வீடியோ அல்லது போட்டோ மூலமாக கொழும்பு தலைமை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிக்க முடியும் என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரினால் போக்கு வரத்து விதி முறல்களை பொலிசாருக்கு அறிவிப்போம் எனும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டு இருந்தன.
Post A Comment:
0 comments so far,add yours