(சா.நடனசபேசன்)
அம்பாரைமாவட்ட மேலதிக அரச அதிபர் வி.ஜெகதீசன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பினது நிதி அனுசரணையில் பெரியநீலாவணையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பத்திற்கு வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாரைமாவட்ட மேலதிக அரச அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.இவ் அமைப்பின் மூலம் வறுமையினால் வீடு இன்றி வாழ்ந்து கொண்டிருந்த இக்குடும்பத்தினை இனங்கண்டு 3,50000.00 பெறுமதியில் இவ் வீடு அமைத்துக் கொடுக்கப்பட இருக்கின்றது.இதில் முதல் கட்டமாக ஒரு இலட்சம் பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட மேலதிக அரச அதிபர் வி.ஜெகதீசன், சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பினது பணிப்பாளர் வாமதேவன்,இந்துக்கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ் தொழில்நுட்ப உத்தியோகத்தரும் சமூகசேவகருமான எஸ்.சிறிரங்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours