(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு  


 சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட  அமுல்படுத்தலில் மூன்றாம் காலாண்டு வரையான அடைவு மட்ட  மதிப்பீட்டுக்கான கலந்துரையாடலும், கடந்த ஆண்டு  ஓய்வூதிய திட்ட நடைமுறைபடுத்தலில்  மட்டக்களப்பு மாவட்டம்  அடைந்து கொண்ட தேசிய  அடைவு மட்டங்களை  கௌரவிக்கின்ற நிகழ்வும்  இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில்  நடைபெற்ற  கலந்துரையாடலில்  2020 ஆம் ஆண்டு  மாவட்டத்திற்கான இலக்கினை முழுமையான அளவில் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை, புதிய சுற்றுநிருபத்திற்கு அமைய  ஓய்வூதிய உத்தேசத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக   கலந்துரையாடப்பட்டதுடன்  2020  ஆம் ஆண்டு  அகில இலங்கை ரீதியில்  முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் 2020 ஆம் ஆண்டு   தேசிய அடைவு மட்டத்தை அடைந்த பிரதேச  செயலகங்களுக்கு சமூக பாதுகாப்பு சபையின் சான்றிதழ்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் , 2020 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு   கொடுப்பனவுகளை வழங்கப்பட்டன.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின்  மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்  ஏ.எம்.அமீன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில்  இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு இணைப்பாளர்  பி.பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சனி சிறீகாந்த், திருமதி.நவருபரஞ்சனி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி  மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours