(-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ மற்றும் நகரின் பஸ் நிலையத்திலும் பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தில் கடந்த 41 நாட்களாக முடக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடை நாளை காலை முதல் அரசாங்கத்தினால் நீக்கப்படவுள்ளதையடுத்து பொதுமக்களை பாதுகாக்கும் பணிகளை சுகாதாரயமைச்சின் சுற்று நிரூபத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் கடந்த 14.08.2021 அன்று இனம் காணப்பட்ட 35 கொரோனோ தொற்றாளர்களையடுத்து மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டிருந்தது.
எனினும் நாளை காலை முதல் அரசாங்கத்தினால் நீக்கப்படவுள்ளதையடுத்து இன்று(30)மட்டக்களப்பு நகரின் பஸ் நிலையமும் மற்றும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிலும் நாளை போக்குவரத்தில் ஈடுபடவுள்ள பஸ்களுக்கு தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இங்கு பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்கள் பஸ்கள் என முக்கிய இடங்கள் சுகாதார தரப்பினரால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours