மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோவிட் தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த நபர் நேற்றைய தினம் கோவிட் தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours