துதி


நியூசிலாந்தில் சிறுபான்மையினருக்கான உரிமை சமமாக வழங்குவதை போன்று இங்கும் வழங்கப்படுவதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவரிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளதாத் தெரிவித்தார்.


இன்றைய தினம் நியூசிலாந்து நாட்டில் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டன் Michael Appleton அவர்களை அவர்களை இலங்கைக்கான  நியூசிலாந்து தூதரகத்தில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

இச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நியூசிலாந்து நாடானது எமது நாட்டைப் போன்றே சிறுபான்மை மற்றும் ஆதி குடியிருப்புக்களைக் கொண்ட நாடாகும் ஆனால் அங்கு அவர்களுக்குரிய சம உரிமை அந்நாட்டு பிரதமரினால் வழங்கப்படுகின்றது. அந் நாட்டு பிரதமர் எம்மைப் போன்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கின்றார். 

இன்றைய சந்திப்பின் போது எமது நாட்டில் அரசியல் நிலைமைகள் பற்றியும் சிறுபான்மை சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடி இருந்தேன். அத்துடன், மிக முக்கியமாக எமது நாட்டின் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் உல்லாசத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றியும் மற்றும் சூரிய ஒளி மூலமான சக்தியினை எதிர்காலத்தில் எவ்வாறு வினைத்திறனாக உபயோகிப்பது என்பது பற்றியும் கலந்துரையாடி இருந்தேன்.

மேலும் எமது பிரதேசங்களில் காணப்படும் காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் பற்றியும் அதிலும் குறிப்பாக சட்டவிரோத மண் அகழ்வு பற்றிய தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்ததோடு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்குமாறும் கோரியிருந்தேன்.

அத்தோடு, நியூசிலாந்து நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் மட்டக்களப்பிற்கான விஜயத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours