(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

நாடறிந்த எழுத்தாளரும், இலக்கிய வாதியும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான மர்ஹும் ஜூனைதா ஷரீப் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கமும், காத்தான்குடி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து இந்த நினைவுப் பகிர்வை நடாத்தியது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டு சிறப்புரையை நிகழ்த்தினார்.

இதில் மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கலாநிதி முருகேசு தயாநிதி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நவநீதன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மௌலவி எம்.எச்.எம்.புகாரி, கலாநிதி எஸ்.யோகராசா சமூக ஆய்வாளர் சிறாஜ் மசூர் காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜாயிதா ஜலால்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் எழுத்தாளர்கள், கலை இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மர்ஹும் ஜூனைதா ஷரீப் அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் எழுதி அச்சில் இருந்த "விடியாத இரவு" எனும் நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நவநீதன் அவர்களினால் அவரின்  பிள்ளைகளிற்கு கையளித்து வெளியிடப்பட்டதுடன் அதன் பிரதிகள் அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

நாடறிந்த எழுத்தாளரும், இலக்கிய வாதியும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான மர்ஹும் ஜூனைதா ஷரீப் தனது 82.வயதில் கடந்த 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் இறையடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours