துதி

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பசளை விடயம் தொடர்பில் அவர்களின் தற்காலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி மேற்கொள்ளப்படும் கண்டனப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரண ஆதரவை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ப்pரதேசங்களில் ஒன்றிணைந்த வகையில் பல போராட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், மட்க்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாக முதற்கட்ட போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


இப்போராட்டத்தில் பிரதேச விவசாயிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சேதன, அசேதன பசளை விடயம் போன்றவற்றினை மையமாக வைத்து மேற்படி போராட்டம் மாவட்ட விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உரமின்றி உழவர் நிலம் இல்லை உடனே உரத்தைத் தா, விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடாதே அரசே, சேதனைப் பசளை பிரவேசத்தால் விளைச்சல் குறைந்தால் நட்டஈடு தருவாயா அரசே? போன்ற பதாதைகளையும், விவசாயப் பொருட்களையும் கையில் ஏந்தியவாறு மேற்படி கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

இதன் போது தமிழத் தேசியக் கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ரஜனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கியதுடன், அவர்களுடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours