( வி.ரி.சகாதேவராஜா)

நிந்தவூர் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய அட்டப்பள்ளம் கிராம மக்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் இரு பெரும் உயர் நிருவாகஅதிகாரிகள் முன்னிலையில் கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இதனை வழங்கிவைத்தார்.

கிழக்கு மாகாணசபையின் பேரவைச்செயலாளரான கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகிய உயர்நிருவாகசேவை அதிகாரிகள் கலந்துகொண்டுரையாற்றியதுடன் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தமை விசேட  அம்சமாகும்.

கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த  ஒருதொகுதி(500குடும்பங்கள்) அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாகவே இது  நடைமுறைப்படுத்தபட்டது.

வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் பிரபல சமுகசெயற்பாட்டாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் அட்டப்பள நிவாரணவிநியோகம் இடம்பெற்றது.

கனடா நாட்டிலுள்ள ' ரு டீப் ' நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.

நிகழ்வில் அட்டப்பள்ள ஆலயத்தலைவர் த.போபாலன் தொழினுட்ப உத்தியோகத்தர் எஸ்.சிறிரங்கன் ஆகியோரும் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர். இறுதியில் கிராமமக்கள் நன்றியுரைத்தனர்.

முன்னதாக  திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மண்டானை தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சாறு மற்றும் திராய்க்கேணி ஆகிய கிராம மக்களுக்கு இத்திட்டத்தின்கீழ் ஏலவே உலருணவு நிவாரணம் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours