நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்
இலங்கையின் தேசிய சொத்தாக இருக்கின்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக அண்மையில் ஜனாதிபதி கோத்தாபாயவினால் நியமிக்கப்பட்டுள்ள அப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி விளையாட்டரங்கில் வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி ஏ.சி.ஏ. எம். புஹாரி தலைமையில் சனிக்கிழமை (23) இரவு இடம்பெற்றது.
சம்மாந்துறை மக்களின் சார்பாக சம்மாந்துறை வெளியீட்டு பணியகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத், இறப்பர் அபிவிருத்தி திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் ஐ.எம். ஹனீபா, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் எம்.ஏ.எம். பௌசர், முதுநிலை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் ஸாதிக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூரா அமீர் மௌலவி கே.எல்.ஆதம்பாபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நூலகர், உத்தியோகத்தர்கள், பிரதேச வர்த்தகர்கள், ஊர் பிரமுகர்கள், மற்றும் கல்வியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours