வி.ரி.சகாதேவராஜா
இந்துசமய கலாசாரத் திணைக்களம் காரைதீவு பிரதேசசெயலகம் மற்றும் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து வரலாற்றில் முதற்தடவையாக இத்தகைய நவராத்திரிவிழாவை ஒழுங்குசெய்திருந்தது.
இந்துசமய கலாசாரத்திணைக்கள பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இவ்விழா சுகாதாரநடைமுறைவிதிக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
5ஆம்நாள் விழா கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்துசமயவிருத்திசங்கத்தின் தலைவர் செ.மணிமாறன் சிறப்புச்சொற்பொழிவாற்றினார்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மிருதங்க சமர்ப்பணம் இடம் பெற்றது.
அறநெறி மாணவரின் பேச்சு நடனமும் இடம்பெற்றது. விசேடபூஜை பஜனை வழிபாடும் ஒருமணிநேரம் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours