(வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமய கலாசாரத் திணைக்களம் காரைதீவு பிரதேசசெயலகம் மற்றும் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து வரலாற்றில் முதற்தடவையாக இத்தகைய நவராத்திரிவிழாவை ஒழுங்குசெய்திருந்தது.
இந்துசமய கலாசாரத்திணைக்கள பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இவ்விழா சுகாதாரநடைமுறைவிதிக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
8ஆம்நாள் விழா காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்றமுன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது. விசேடஅதிதிகளாக தலைவர் வெ.ஜெயநாதன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தா ர்.இவ்விழாவில் அறநெறி மாணவரின் பேச்சு நடனமும் இடம்பெற்றது. விசேடபூஜை பஜனை வழிபாடும் ஒருமணிநேரம் இடம்பெற்றது.
திணைக்களத்தின் உதவிப்பணதிருமதி ஹேமலோஜினி குமரன் மெய்நிகர் அலையில் உரையாற்றினார்.
இந்துகலாசாரஅமைச்சின் காரைதீவு சுவாமிவிபுலாநந்தர் கற்கைகள் நிறுவக மாணவியரின் நடனம் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நடனம் பேச்சு நடைபெற்றது
Post A Comment:
0 comments so far,add yours