(சகாதேவராஜா)


காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று(15)வெள்ளிக்கிழமை நடைபெறாது என ஆலயபரிபாலனசபைத்தலைவர் கலாபூசணம் வித்தகர் சி.இராமநாதன் தெரிவித்தார்.
இவ்வாலய வருடாந்த தீமிதிப்பு மஹோற்சவம் கடந்த 5ஆம் திகதி சமுத்திரதீர்த்தம் கொண்டுவரப்பட்டு கதவுதிறத்தலுடன் ஆரம்பமானது.
கொரோனா காரணமாக ஆலய நிருவாகிகள் மற்றும் தின உபயகாரர்கள் மட்டும் கலந்துகொண்ட தினச்சடங்குகள் இடம்பெற்றுவந்தன.
பொதுவான பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இவ்வாலயத்தின் சிறப்புகளில் ஒன்றான தீமிதிப்பு இவ்வருடம் கொரோனா காரணமாக இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours