(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸின் சொந்தநிதியிருந்து 06ஆம் கிராமம் மிலேனியம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
சாளம்பைக்கேணி - 02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யு.எல்.தெளபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதே சபை உறுப்பினர் ரீ.சுதர்சன் சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எம்.அஷ்ரப், அல்-தாஜுன் வித்தியாலய அதிபர் ஏ.வீ.எம்.சவாஹிர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.பைசாத், முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுக் தலைவர் எஸ்.ஹனீபா, முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என்.எம்.நசீல், பாலர் பாடசாலை ஆசிரியர்களான ஏ.வீ.றனீசியா, ஏ.எம்.அஜ்வியா, எஸ்.வனிதா பெற்றோர்கள், உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours