மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் செயற்பட்டு வரும் சனசமூக நிலையங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவற்றிற்கு மாநகரசபை நிதியின் மூலம் பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீட்டில் மாநகர எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்நிதியின் மூலம் கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக சிறப்பாக இயங்கி வரும் பத்து சனசமூக நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours