பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்த தவறியவர்களின்  மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கொரோனாத் தாக்கம் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால், மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்தத் தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours