(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டு சில அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கித்துள் உறுகாமம் இணைப்புத் திட்டத்தினை பார்வையிட்டதுடன் விவசாயிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

கித்துள், உறுகாம குளங்களை இணைத்து நீர் கொள்ளளவினை அதிகரிப்பதன் மூலமாக கணிசமானளவு நீரை சேமித்து விவசாய காணிகளுக்கு தேவையான நீரை தங்குதடையின்றி போதியளவு விநியோகிப்பதற்கான திட்டத்தினையும் அதற்கான கட்டுமான நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கான களவிஜயத்தினையே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ   மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட  துறைசார் அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours