(வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால கொரோனாத்தொற்றால் மட்டு.மாவட்டத்தின் வாகரையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இராமகிருஷ்ண மிஷன் மூலமாக 330 குடும்பங்களைச் சேர்ந்த 1450 மக்கள் பயன்பெறும் வகையில் 1500/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டு. இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மஹராஜ்ஜின் ஒழுங்கமைப்பில் உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் இவ்உலருணவுப்பொதிகளை வாகரைக்குச் சென்று மக்களுக்கு வழங்கிவைத்தார்.

இதற்கான நிதி பங்களிப்பினை கனடாவிலிருந்து சர்வதேச மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்  International Medical Health Organisation of Canada  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏலவே, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்  மட்டக்களப்பிலும் மன்னாரிலும் ஏறக்குறைய 7.5 லட்சம் ரூபாய் செலவில் 500 குடும்பங்களை சார்ந்த 2500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பணிகள்  நடைபெற்றுள்ளன.கண்டியிலும் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயித்தியமலை நெல்லி காடு பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு தலா  1500 மதிப்புள்ள அரிசி, கோதுமை, சீனி ,பருப்பு ,கடலை,சோயா, சம போச போன்ற அத்தியாவசிய  பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான நிதியை கனடாவில் இருந்து சர்வதேச மருத்துவ அமைப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது ((International Medical Health Organisation of Canada)




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours