(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
பங்காளதேஷில் இந்து பௌத்த ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு இந்துக்கள் படுகொலை செய்தமைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்.
பங்காளதேஷ் நாட்டில் கடந்த 29 திகதி நவராத்திரி தினத்தில் இந்து பௌத்த ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு ஒரு இந்து குரு உட்ப 11 இந்துக்களை படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து அம்பாரை மாவட்ட இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.
இவ் கண்டன ஆர்ப்பாட்டமானது அம்பாரை மாவட்ட இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் கைலாயப்பிள்ளை வரதனின் தலைமையில் நேற்று ஞாற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தம்பிலுவிலில் பொன்வள்ளி மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்று இருந்தன.
இதன்போது இந்து அமைப்புக்களின் பிரதி நிதிகள் படுகொலைக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு கண்டன கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்ததுடன் பொன்வள்ளி மண்டபத்தில் உயிர்நீத்தவர்களின் பெயரால் தீபச்சுடர்கள் ஏற்றி ஆத்மசாந்தி வேண்டிய பிரார்த்தனையிலும் ஈடுபட்டு இருந்தனர்
இவ் படுகொலையானது கடந்த நவராத்திரி தினத்தில் இடம்பெற்று இருந்ததுடன் இந்த வன்முறைகள் காரணமாக இந்து பௌத்த ஆலயங்கள் இந்துக்களின் வர்த்தக நிலையங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டதோடு சுமார் 800க்கு மேற்பட்ட இந்துக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒரு இந்து துறவி உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பினர் தெரிவிதுள்ளனர்.
அந்தவகையில் படுகொலைகளை கண்டித்து நேற்று மாலை இடம்பெற்று இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண.இராஜரெத்தினம் திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வண்ணியசிங்கம் ஜயந்தன் மற்றும் இந்து நிறுவனங்களின் இணைப்பாளர் கே.வரதன் ஆகியோர் ஊடகங்களுக்கு தமது கண்டன அறிக்கைகளை தெரிவித்து இருந்தனர்.
இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்பாரை மாவட்ட இந்து குருமார்கள் இந்து ஆலயங்களின் நிருவாகிகள் இந்து பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்துக்களின் படுகொலைக்கு எதிராக தமது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours